பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அணி 1. வேற்றுப் பொருள் வைப்பணி தீது நல்லன வாயிரு திறத்தவுந் தெரிந்தே ஏதி லார்க்கவை செய்வரேல் தமக்குடன் எய்தும் பேதை நீரையாய் அமரரைச் சிறைசெய்த பிழையால் மாது யர்ப்பட லன்றியே இறுதியும் வருமால். இதில் முதல் இரண்டடிகளில் "தீமையும் நன்மையு மாகிய செயல்களை ஒருவன் பிறர்க்குச் செய்வாளுகில் அவற்றின் பயனை அவன் அடைந்து தீருவான்’ என்று கூறியது பொதுப் பொருளாகும். பின்னிரண்டடிகளில் "தேவர்களைச் சிறையிலடைத்துத் துன்புறுத்திய குற்றத் தைச் சூரபன்மன் செய்துள்ளதால் அவன் துன்பமே யன்றி மரணமும் அடைவான்’ என்று சிறப்புப் பொருள் விளக்கப்பட்டிருக்கிறது. "பொதுப்பொருளால் சிறப்புப்பொருளையும், சிறப்புப் பொருளால் பொதுப்பொருளையும் நிறுவுதலே வேற்றுப் பொருள் வைப்பணியாம்.” 2. வேற்றுமையணி ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலி நீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ். இப்பாவில் சூரியனுக்கும். தமிழுக்கும் உள்ள இரு ளகற்றுவதாகிய ஒப்புமை கூறி, பின் அவற்றுக்கிடையே யுள்ள வேற்றுமையைக் கூறுகின்ருர். இவ்வாறு கூறுவதே வேற்றுமையணியாம்.