பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


இன்னிசை வெண்பா ஆற்றவும் கற்ருர் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை அந்நாடு. வேற்று.நா டாகா தமவேயாம் ஆயினுல் ஆற்றுணு வேண்டுவ தில். வெண்பாவின் பொது இலக்கணத்துடன் நான்கு அடிகள் கொண்டதாய், தனிச்சொல் இன்றி இது வந்திருக்கிறது. இவ்வாறு வருவதே இன்னிசை வெண்பா. "வெண்பாவின் பொது இலக்கணத்துடன் நான்கு அடிகளாய்த் தனிச் சொல் இன்றி வருவதே இன்னிசை வெண்பாவாம்.” குறிப்பு:- தனிச் சொல் பெற்ருலும் பல விகற்பத்தால் வந்தால் அது இன்னிசை வெண்பாவேயாம். 2. ஆசிரியப்பா-(பொது) தீர்த்த மென்பது சிவகங் கையே ஏத்த ருந்தல மெழிற்புலி யூரே மூர்த்தி யம்பலக் கூத்தன. துருவே. இப்பா ஆசிரியப்பாவாகும். இதில் நாற்சீர் அடிகளே பயிலுகின்றன. எல்லாம் ஈரசைச் சீர்களாகவே இருக் கின்றன. இவ்வாறு வருவதே ஆசிரியப்பாவாகும். "நாற்சீரான் வரும் அடிகளைக் கொண்டதாய், பெரும் பாலும் ஈரசைச் சீர்களால் பயிலுவது ஆசிரியப்பாவாகும். இது அகவற்பா வென்றும் பெயர் பெறும். இது மூன் றடிச் சிறுமை உடையது. பாடுவோனது திறத்திற்குத் தகுந்தாற்போன்று பலவடிகளையுடையதாய் இது வரும்.”