பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


"இவ்வெண்பா குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, சிந்தியல் வெண்பா, பஃருெடை வெண்பா என ஐந்து வகைப்படும். குறள் வெண்பா அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது - இது குறள் வெண்பா. இது வெண்பாவின் பொது இலக்கணத்துடன் இரண்டு அடிகளால் வந்துள்ளது. - வெண்பாவின் பொது இலக்கணத்துடன் ஈரடியால் வருவதே குறள் வெண்பாவாம்.” -- 4 நேரிசை வெண்பா பன்னளுஞ் சென்றக்கால் பண்பிலார் தம்முழை என்னுைம் வேண்டுப என்றிகழ்ப - என்னனும் வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர் காண்டொறும் செய்வர் சிறப்பு. இது வெண்பாவின் பொது இலக்கணத்துடன் நான்கு அடிகளால் வந்துள்ளது. இதில் இரண்டா மடியின் இறுதிச் சீர் முதல் இரண்டடிகளுக்கேற்ற தனிச் சொல் பெற்றிருக்கின்றது. இவ்வாறு வருவதே நேரிசை வெண்பா. o * "வெண்பாவின் பொது இலக்கணத்துடன் நான்கு அடிகளாய், இரண்டாமடியின் இறுதிச் சீர் முதல் இரண் டடிகளுக்கு ஏற்ற தனிச் சொல் பெற்று வருவதே நேரிசை வெண்பாவாம்.” குறிப்பு; மற்றைய வடிகளில் தனிச் சொல் பெற்று வந்தாலும் அது நேரிசை வெண்பா அன்று. அது இன்னிசை வெண்பாவினையே சாரும்.