பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 மொழிப் பயிற்சி 1.வாக்கியம் - பல வகைகள் முருகன் பாடினன் - இது ஒரு வாக்கியம். முருகன் பாடம் படித்தான் - இது செய்தி வாக்கியம். முருகா! வா - இது கட்டளை வாக்கியம். முருகன் வந்தானா ? - இது வினாவாக்கியம். ஆ! முருகா! போரின் தீமையை உலகத்தார் இன்னும் உணர்ந்த பாடில்லையே!-இது உணர்ச்சி வாக்கியம். குயவன் குடத்தைச் செய்தான்-இது செய்வினை வாக்கியம். குடம் குயவனாற் செய்யப்பட்டது - இது செயப்பாட்டுவினை வாக்கியம். முருகன் படித்தான் - இது உடன்பாட்டு வினைவாக்கியம். முருகன் படித்தானிலன் - இது எதிர்மறை வினை வாக்கியம். முருகன் ஓடினன் - இது தன்வினை வாக்கியம். முருகன் வேலனை வருவித்தான் - இது பிறவினை வாக்கியம். வேலன் ஓடினான் - இது செயப்படு பொருள் குன்றிய வினை வாக்கியம். வேலன் உணவை உண்டான் - இது செயப்படு பொருள் குன்றா வினை வாக்கியம்.