பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91


வலிமையுள்ள வேலன் வலியற்ற அரக்கனை எளிதில் அழித்தான் - இவ் வாக்கியத்தில் 'வேலன்' என்பது எழுவாய். 'வலிமை' என்பது எழுவாயின் அடை. 'அரக்கனை' என்பது செயப்படு பொருள், 'வலியற்ற' என்பது செயப்படு பொருளின் அடை. 'அழித்தான்' என்பது பயனிலை. 'எளிதில்' என்பது பயனிலையின் அடை, ஒவ்வொன்றின் அடையும் அதனையடுத்தே வரும். "எழுவாய், பயனிலை, செயப்படு பொருள்களில் ஒவ்வொன்றுக்கும் உரிய அடைமொழி அதனதன் முன் நிற்கும்.” கண்டேன் நான் சீதையை - இதில் ப ய னி லை, வாக்கியத்தின் முதலில் வந்தது. சீதையை நான் கண்டேன்- இதில் செய்யப்படு பொருள், வாக்கியத்தின் முதலில் வந்தது. மகிழ்ச்சி, அச்சம் முதலிய காலங்களில் இவை வர வேண்டிய முறையில் பிறழ்ந்து வரும். "மகிழ்ச்சி, அச்சம் முதலிய காலங்களில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை முதலியவைகள், தாம் நிற்க வேண்டிய இடம் பிறழ்ந்தும் வரும்.” போ- இது ஒரு வாக்கியம். நீ போ என்பதே இதன் முழு வடிவம். இதில் எழுவாய் தொக்கு நின்றது. "சில சமயங்களில் ஒரு வாக்கியம் எழுவாய் தொக்கு நிற்க, பயனிலை வாக்கியமாக நிற்றலும் உண்டு.” வளர்ந்த சாத்தன் கரைந்து போனன்- இதில் வளர்ந்த, கரைந்த என்பவைகள் எச்சங்கள். வளர்ந்த