பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92


என்பது சாத்தனைத் தழுவுவதால் இது பெயரெச்சம். இது அப்பெயருக்கு முன் நிற்கிறது. இது போலவே கரைந்து என்ற எச்சவினை போனன் என்பதன் முன் நின்று வினையைத் தழுவியதால் இது வினையெச்சம். "பெயரெச்சம் பெயர்ச் சொல்லுக்கு மு ன் னு ம் வினையெச்சம் வினைச் சொல்லுக்கு முன்னும் வரும்." 2. ஒரே கருத்தை பல உருவ வாக்கியங் களில் வெளியிடுதல் இன்று வேலன் திறமையுடன் போர் செய்து வெற்றி பெற்ருன்- இது செய்தி வாக்கியம். ஆகா! இன்று வேலன் எவ்வளவு திறமையுடன் போர் செய்து வெற்றி பெற்ருன்!- இது உணர்ச்சி வாக்கியம். இன்று வேலன் திறமையுடன் போர் செய்ததால் வெற்றி பெற்ருனன்ருே?- இது வின வாக்கியம். வேலன் வெற்றி பெற்றதையே மேற்கூறிய செய்தி வாச்கியம், உணர்ச்சி, வாக்கியம், வி ைவாக்கியங்கள் தெரிவிக்கின்றன. "நான் வருவேன்' என்று கண்ணன் கூறினன்இது கேர்கற்று வாக்கியம். ஆவர் பாடங் கற்பிப்பதாகக் கூறினர் - இது அயற்கூற்று வாக்கியம். மேற்கூறிய வாக்கியங்கள் யாவும் தனி வாக்கியம், தொடர் வாக்கியம், கலவை வாக்கியம் என்ற மூன்றி லடங்கும்.