பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

. நெல்லையப்பன் நெல்லை சென்ருன் - இது ஒளவையார் ஒரு பெண் புலவர்; நன்கு கற்ருர், நாட்டில் திரிந்தார், நலம் பல கொண்டார் - இது தொடர் வாக்கியம்: == முருகன் தன் நண்பனிடம் விடைபெற்றுச் சிதம்பரம் சென்ருன் - இது கலவை வாக்கியம். (மேற்கூறிய வாக்கியங்களெல்லாம் முன் வகுப்புக் களில் படித்தவைகளே] 3. வாக்கிய அமைப்பு எழுவாய், பயனிலை, செயப்படுபொருள், எச்சங் கள் நிற்கும் முறை. கந்தன் வந்தான் - இதில் கந்தன் எழுவாய்; வந்தான் பயனிலை. இது ஒரு வாக்கியம். இதில் இரு சொற்கள் இருக்கின்றன. எழுவாய் முதலிலும் பயனிலை இறுதியிலும் நிற்கின்றன. "குறைந்தது இரு சொற்களால் ஆவதே வாக்கிய மாகும். எழுவாய் முதலில் நிற்கும். பயனிலை இறுதியில் நிற்கும்.” - முருகன் படித்தான் - இதில் படித்தான் என்ற வினைச் சொல் பயனிலையாயிற்று. ஆகவே இது வினைப் பயனிலையாகும். இவன் முருகன் - இதில் 'முருகன்' என்ற பெயர்ச் சொல் பயனிலையாயிற்று. ஆகவே இது பெயர்ப் பயனிலை.