பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வினைச்சொல்:-

முருகன் ஓடினான். நான் படிக்கிறேன். கப்பல் செல்லும். இவற்றில் ஒடினான், படிக்கிறேன், செல்லும் என்ற சொற்கள் முருகன் முதலிய பொருட்களின் தொழிலைக் காட்டுகின்றன. ஆகவே இவை வினைச் சொற்கள்.

"ஒரு பொருளின் தொழிலைக் காட்டுஞ் சொல்லே வினைச் சொல்லாம்."

இடைச்சொல்:-

முருகனும் வேலனும் சென்றார்கள்-இதில் முருகன், வேலன் என்ற பெயர்ச் சொற்களில் 'உம்' வந்தது.

நடந்தனனே-இந்த வினைச் சொல்லில் 'ஏ, வந்தது. 'உம், ஏ' போன்ற சொற்கள் தனித்து வாரா. பெயர்ச் சொற்களையும், வினைச் சொற்களையும் அவை அடுத்தே வரும். இச் சொற்களே இடைச்சொல்.

"தனித்து வழங்குதலன்றி, பெயர் வினைகளே அடுத்து வரும் சொல்லே இடைச் சொல்லாம்.

உரிச்சொல்:-

சால நன்று. நனி பேதை. உறு புகழ்.

இவற்றுள் சால, நனி, உறு என்ற சொற்கள் தனித்து வழங்கவில்லை. பெயர், வினைகளை அடுத்து வந்தன. அவற்றின் பண்பையும் உணர்த்தின. இவைகள் உரிச் சொற்கள்.