பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


"பாவுக்குரிய சொல்லே உரிச் சொல்லாகும். இது தனித்து வழங்குதல் இல்லை. பெயர் வினைகளையடுத்தே இது வரும். அவற்றின் பண்பையும் உணர்த்தி நிற்கும்.”

பயிற்சி

1. சொல் என்றால் என்ன?

2. ஈ, ஐ, அங், ங்கு, அங்கு, ரம், மரம், ளை, கிளை, கல், முக்காலி இவற்றிலுள்ள சொற்களை எடுத்து எழுது.

3. குங்அ, டம்ம, பம்ட. ன்லவே, ண்க-இவற்றில் எழுத்துக்கள் மாறியிருக்கின்றன. சரியாக சொற்கள் அமையும் வண்ணம் இவற்றை எழுது.

4. சொல் எத்தனை வகைப் படும்? எவை?

5. பெயர்ச் சொல் என்றால் என்ன? உதாரணங் கொடு.

6. வினைச் சொல்லை உதாரணத்துடன் விளக்கு.

7. இடைச் சொல்லை உதாரணங் காட்டி வி ள க் கி எழுது.

8. உரிச் சொல் என்றால் என்ன? அது எவ்வாறு வரும்?

9. மரம் துரையால் நடப்பட்டது. அது வளர்ந்தது. கிளைகள் பல அது கொண்டிருந்தது. கிளியும் பறவையும் அங்கு கடிது பறந்து வந்தன. பூக்களில் உள்ள தேனை நன்றாக உண்டன-இச் சொற்களை கீழ் வரும் கட்டத்தில் அடை.

--- பெயர்ச் சொல் | வினைச் சொல் | இடைச் சொல்| உரிச் சொல் ---

---