பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

அறுவகைப் பெயர்:-

பொருட்பெயர்:-

மரம், மலர், படம், செடி-இவை பொருள்களைக் குறிக்கும் சொற்கள். இவைகளே பொருட்பெயர்.

"ஏதேனும் ஒரு பொருளின் பெயரே பொருட்பெயராம்"

இடப்பெயர்:-

மதுரை, திண்டுக்கல், வடக்கன்குளம்-இவைகள் பெயர்ச் சொற்கள். ஆனால் இவை இடத்தைக் குறிக்கின்றன. ஆகவே இவை இடப்பெயர்.

"ஏதேனும் ஓர் இடத்தின் பெயரே இடப் பெயராம்."

காலப்பெயர்:-

கார்த்திகை, திங்கள், மாலை-இவை பெயர்ச் சொற்களென்றாலும், காலத்தைக் குறிப்பதால் காலப்பெயர்.

“ஏதேனும் ஒரு காலத்தின் பெயரே காலப் பெயராம்.”

சினைப்பெயர்:-

கண், கை, கிளை, வேர்-இவை பெயர்ச்சொற்கள். இவை உறுப்பைக் காட்டுகின்றன. ஆகவே இவை சினைப்பெயர்.