பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


6. சினைப் பெயர் என்றால் என்ன?

7. குணப் பெயர் என்றால் என்ன?

8. தொழிற் பெயர் என்றால் என்ன?

9. வேலன் செந்துாரில் பிறந்தான். அவன் வளர வளர அவனது கைகளும், கால்களும் வ ள ர் ந் த ன. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் பள்ளி சென்றான். பயின்றான். கரையிலாக் கல்வியும் கைவரப் பெற்றான். பொறாமை நீக்கினான். புகழ் கொண்டான்-இவற்றிலுள்ள அறுவகைப் பெயர்களை அடுத்திருக்கும் கட்டத்தில் அடை.

- - - பொருள் | இடம் | காலம் | சினை | குணம் | தொழில் - - - -


- - - -

4. மூவிடம்-தன்மை:-

நான் காலையில் எழுந்தேன்.

நாங்கள் காலையில் எழுந்து கடவுளைத் தொழுதோம்

இவற்றிலுள்ள நான், நாங்கள் என்ற சொற்கள் பேசுவோன் தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும் குறிக்க வழங்கும் சொற்களாம். இவ்வாறு சொல்லுவதே தன்மை இடமாகும். 'நான்' என்பது தன்மை ஒருமை, 'நாங்கள்’ என்பது தன்மைப் பன்மை. |