பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


"பேசுவேன் தன்னை உணர்த்துவதே தன்மையாம். அதாவது பேசுகிறவனே தன்மையாம். இதில் ஒருமை, பன்மை என்ற வேறுபாடு உண்டு. நான் யான் என்பவைகள் தன்மை ஒருமைச் சொற்களாம். நாம், யாம், நாங்கள், யாங்கள் என்பவைகள் தன்மைப் பன்மைச் சொற்களாம்."

முன்னிலை:-

நீ பாடினாய்.

நீங்கள் ஆடினீர்கள்.

இவற்றிலுள்ள நீ, நீங்கள் என்ற சொற்கள் கேட்போனையும், அவனைச் சார்ந்தோர்களையும் குறிக்க வழங்கும் சொற்களாம். இ வ் வா று வருவதே முன்னிலை இடமாகும்.

'நீ' என்பது ஒருமை. 'நீங்கள்’ என்பது முன்னிலைப் பன்மை.

"முன் நிற்பவனைக் குறிப்பதே முன்னிலையாம். அதாவது கேட்பவனே முன்னிலையாம். இதிலும் ஒருமை, பன்மை என்ற வேறுபாடு உண்டு. நீ என்பது முன்னிலை ஒருமைச் சொல்லாம். நீர், நீயிர், நீவிர், நீங்கள் என்பன முன்னிலைப் பன்மைச் சொற்களாம்."

படர்க்கை:

பசு பால் கொடுக்கிறது.

பசுக்கள் படுத்திருக்கின்றன.