பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


III. நிறுத்தக் குறிகள் ,-

ஆசிரியர் வந்தார். ஒரு சோலையில் மா, பலா, தென்னை, கோங்கு முதலிய மரங்கள் இருக்கின்றன. ஒளவையார் “ சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை" என்று கூறுகின்றார்.

பேம் கூறிய வாக்கியங்களில் , , . " " என்ற அடையாளங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவைகளே நிறுத்தக் குறிகளாம். மா, பலா, தென்னை என்று அடையாளம் வைத்து எழுதவில்லை யானால் மாப லாதென்னை என்று எழுதவும், படிக்கவும் கூடும். அப்பொழுது அவற்றின் பொருள் தெரியாதுபோகும்.

"வாக்கியத்தின் கருத்தைத் தெளிவாக அறிய வைக்கும் குறிகளே நிறுத்தக் குறிகளாம்".


, இது கால்புள்ளி யாகும். இவ்விடத்து ஒரு மாத்திரை நிறுத்த வேண்டும்.


இது அரைப்புள்ளியாகும். இவ்விடத்து

இருமாத்திரைகள் நிறுத்த வேண்டும்.


இது முக்கால் புள்ளியாகும். இவ்விடத்து

மூன்று மாத்திரைகள் நிறுத்த வேண்டும்.


. இது முற்றுப் புள்ளியாகும். இவ்விடத்து நான்கு மாத்திரைகள் நிறுத்த வேண்டும்.


! இது ஆச்சரியக் குறியாகும்.

? இது கேள்விக் குறியாகும்.

" இது மேற்கோள் குறியாகும்.