பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


காற் புள்ளி :-

ஒரு கடையில் பழம், வெற்றிலை, பாக்கு வாங்கினேன்.-இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்ச் சொற்கள் வரும் பொழுது ஒவ்வொன்றின் இடையிலும் காற்புள்ளி இட வேண்டும்.

படித்தவனும் படியாதவனும், ஏழையும் பணக்காரனும் அங்கு வந்தார்கள். இவ்வாறு சொற்கள் இரண்டு இரண்டாய் அடுக்கி வரும் பொழுதும் காற்புள்ளி யிட வேண்டும்.

அரசனே, கேட்பாயாக - அழைக்கப்படும் பெயர்ச் சொல்லை யடுத்தும் காற்புள்ளி இட வேண்டும்.

" ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்ச் சொற்கள் வரும் பொழுது, கடைசியில் வரும் பெயர்ச் சொல் தவிர மற்றையவற்றின் ஒவ்வொன்றின் பின்னும், இரண்டிரண்டாய் அடுக்கிவரும் சொற்களின் பின்னும், அழைக்கப்படும் பெயர்ச் சொல்லை யடுத்தும் காற் புள்ளி இட வேண்டும்.

அரைப் புள்ளி :-

நான் கடைக்குப் போனேன் ; தேங்காய் வாங்கினேன்; அதைத்தின்றேன். இவ்வாறு தொடர் நிலை வாக்கியங்களின் முடிவில் அரைப் புள்ளி இட வேண்டும்.