பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


சுட்டிக் காட்டி, அச் சொற்களை விட்டு அவை நீங்கிய காலத்தும் எஞ்சிய சொற்களுக்குப் பொருள் இருப்பதே புறச்சுட்டாம்.

                     பயிற்சி

1 சுட்டு எத்தனை வகைப்படும் ? எவை ?

2 அகச் சுட்டு என்றால் என்ன? உதாரணத்துடன் விளக்கு.

3 புறச் சுட்டு என்றால் என்ன? உதாரணம் கொடு.

4 அகச்சுட்டிற்கும் புறச்சுட்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?

5 அந்தக் கொற்றன் நல்லவன். இந்த வீடு மிக உயர்ந்தது. அக் கொற்றன் இவ்வீட்டைக் கட்டினான். இவன் மிக நல்லவன். இவன் நல்ல பேச்சாளன். உம்பர் நாடு உலகில் சிறந்தது. ஊழையும் உப்பக்கம் காண்பர்- இவற்றிலுள்ள சுட்டுச் சொற்களை எடுத்து எழுது. அவைகளை அகச் சுட்டு, புறச் சுட்டு என்ற தலைப்புக்களில் பிரித்து எழுது.

6 பூர்த்தி செய்:- வேலன் காலையில் எழுந்தான், ___ கடவுளை வணங்கிகனான். ___ கடவுள் அவனுக்கு அருள் புரிந்தார். அருள் புரிந்ததால் __ ___ யாண்டும் வெற்றி பெற்ரறான்