பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


7 வேலன் அவனைக் கண்டான். கண்டதால் அவ்விருவரும் கலந்து கொண்டனர். அவர்களில் இவனே உம்பர் நாடு சென்ருன் -- இவற்றிலுள்ள சுட்டெழுத்துக்களைக் கீழ் கோடிட்டுக் காட்டு.

                 _____

2. வினா (அகம், புறம்)

எவன், ஏவன்? யாவன்? - இவற்றிலுள்ள ‘எ, ஏ, யா'-என்ற வினா எழுத்துக்களை எடுத்து விட்டால் எஞ்சிய பதத்திற்குப் பொருள் இல்லை. இவ்வாறு வருவதே அக வினா.

   அவனா? அவனே? அவனே? எக் கொற்றன்? யாங்ஙனம்? - இவற்றிலுள்ள "ஆ, ஏ, ஓ, எ, யா’ என்ற வினா  எழுத்துக்களை எடுத்து விட்டாலும் எஞ்சிய பதத்திற்குப் பொருள் இருக்கிறது. இவ்வாறு வருவது புற வினவாகும்.
 எஞ்சிய பதத்திற்குப் பொருள் இராதது அகவினாவாகும். எஞ்சிய பதத்திற்குப் பொருள் இருப்பது புறவினாவாகும்.

'எ, ஏ, யா என்ற மூன்றும் சொற்களின் முதலில் உள்ளிருந்து வினாப்