பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


பொருளை உணர்த்தும். அப்பொழுது அவை அகவினா என்று பெயர் பெறும்".

"எ, யா, என்ற இரண்டும் சொற்களின் முதலில் புறத்திருந்தும், ஆ ஓ,ஏ, என்ற மூன்றும் சொற்களின் ஈற்றில் புறத்திருந்தும் வினப் பொருளை உணர்த்தும். அப்பொழுது அவை புறவின என்று பெயர் பெறும்".

                     பயிற்சி

1 வினா எத்தனை வகைப்படும்?

2 அகவினாவை உதாரணத்துடன் விளக்கு.

3 புறவின என்றால் என்ன? உதாரணம்

 கொண்டு விளக்கு. 

4 அகவினாவிற்கும், புறவினாவிற்கும் உள்ள

 வேறுபாடு யாது?

5 செய்தது அவனோ? அங்கு போனது யார்? அவ்விடம் போனவன் அவனே? நீ எவ்வழியில் சென்றாய்? அவ்வழியில் சென்றது அவனா? அதை யாங்ஙனம் முடித்தான்? இவற்றிலுள்ள வினாச் சொற்களை எடுத்து எழுது. அதன் பின் அவைகளை அகவினா, புறவினவாகப் பிரித்து எழுது.

6 வேலன் -? கந்தன் காவலைக் கடந்து -? - அவனோ - அவனே? - ஓடினான் . - ஓடியது

மேற்கூறிய இடைவெளிகளில் தக்க சொற்களை அமைத்து எழுது.