பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

7எவன் எடுத்தான்? எவ்வாறு எடுத்தான்? தடுத்தது யார்? அவன் தடுத்தானா? ஏன் தடுத்தான்? அவனே தடுத்தான்? - இவற்றிலுள்ள வினா எழுத்துக்களைக் கீழ்க் கோடிட்டுக் காட்டு.

———————

3. உயிர் மெய்யின் வகை 5. (குறில், நெடில், வலி, மெலி, இடை)

உயிரை வைத்து உயிர்மெய்யெழுத்தைக் குறில் உயிர்மெய், நெடில் உயிர்மெய் என்று இருவகையாகப் பிரிக்கலாம்.

குறில் உயிர்மெய்:-

க = க் + அ - ‘க்' என்ற மெய்யுடன் 'அ' என்ற குறில் சேர்ந்தது.

இது போன்று 'அ, இ, உ, எ, ஒ' என்ற ஐந்து குற்றெழுத்துக்களும் பதினெட்டு மெய்யெழுத்துக்களுடனும் தனித்தனியே சேரும். சேர்ந்து பிறக்கின்ற எழுத்துக்களே குறில் உயிர் மெய்.

“ஐந்து குற்றெழுத்துக்களும் பதினெட்டு மெய்யெழுத்துக்களுடன் தனித் தனியே கூட, குறில் உயிர் மெய்யெழுத்துக்கள் தொண்ணூறாம்."