பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

5. திணை

உயர் திணை

நேரு, வேலன், மங்கையர்க்கரசி - இப்பெயர்கள் மக்களைக் குறிக்கின்றன. முருகன், தேவேந்திரன், சங்கரன் - இப்பெயர்கள் தேவர்களைக் குறிக்கின்றன.

மக்களும், தேவர்களும் பகுத்தறிவுள்ள பிரிவினரைச் சார்ந்தவராவர். அவர்களே உயர் பகுப்பு. அப்பகுப்பிற்கு உயர்திணை என்று பெயர். புலி, பூனை - இவைகள் உயிர் உள்ளவைகள். இவற்றிற்குப் பகுத்தறிவில்லை. மண், கல் - இவைகள் உயிர் அற்றவைகள். இவற்றிற்கும் பகுத்தறிவில்லை. புலியும், மண்ணும் பகுத்தறிவற்ற பிரிவைச் சார்ந்தன. இப்பகுப்பிற்கு அஃறிணை என்று பெயர்.

"திணை என்றால் பிரிவு. உயர்ந்த பிரிவைச் சார்ந்ததே உயர்திணையாம். அப்பிரிவைச் சார்ந்தவர்களே மக்கள், தேவர், நரகர் ஆம். மற்று உயிர் உள்ளனவும், இல்லனவுமாகியவை அஃறிணையாம்.’’