பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பயிற்சி

1இடுகுறிப்பெயர் என்றால் என்ன? உதாரணம் கொடு.
2காரணப் பெயர் என்றால் என்ன? உதாரணம் கொடு.
3மரத்தைக் கந்தன் வளர்த்தான். வேலன் கண்ணனைக் கண்டான். அவர்கள் இருவரும் நாற்காலியில் உட்கார்ந்தனர். முக்காலி பக்கத்தில் இருந்தது. கல்லைக் கண்டான். நாய் சோற்றைத் தின்றது. பறவைகள் பறந்தன. அணிகள் அணியப்பட்டன்——இவற்றிலுள்ள பெயர்ச் சொற்களை எடுத்து எழுது.
அதன்பின் அவற்றை இடுகுறிப் பெயர், காரணப் பெயர் என்ற தலைப்புக்களில் பிரித்து எழுது.
4சுட்டுப் பெயர் என்றால் என்ன? உதாரணம் கொடு.
5வினாப் பெயரை உதாரணம் கொண்டு விளக்கு.
6அவன் வேலனை அடித்தானா? அந்த முருகனை அடித்தது யார்? முருகனா அவனைப் பார்த்தான்? இவன் போகும் காலத்து வந்தது கண்ணனோ? கண்ணன் இதை எவ்வாறு செய்தான்? ஏன் செய்தான்? உம்பர்களே சிறந்தவர்கள்——இவற்றிலுள்ள சுட்டுச் சொற்களையும் வினாச் சொற்களையும் தனித்தனி எடுத்து எழுது.