பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


                        23
  3. சுட்டுப் பெயர்
           அவன் - ஆண்பால் 
           அவள் - பெண்பால்
           அவர் - பலர் பால் 
           அது - ஒன்றன் பால்

அவை - பலவின் பால் - இப் பெயர்ச் சொற்கள் சுட்டெழுத்துக்களை முதலில் கொண்டிருக்கின்றன. இவை சுட்டினடியாகப் பிறந்தன. ஆகையினால் இவைகள் சுட்டுப் பெயர்கள். இவை ஐம்பால்களில் வந்தன. “சுட்டினடியில் பிறக்கும் பெயர்களே சுட்டுப் பெயர்களாம். இவை ஐம்பாலிலும் வரும்.”

4. வினப் பெயர்

          எவன்? -ஆண்பால் 
          எவள்? -பெண்பால்
          எவர்? -பலர்பால் 
          எது? -ஒன்றன்பால் 
          எவை? -பலவின்பால் - இவை

வினாவினடியாகப் பிறந்த வினாப் பெயர்கள். இவைகளும் ஐம்பாலிலும் வந்தன. 'வினப்பொருளைத் தரும் பெயர்கள் வினாப் பெயர்களாம். இவை ஐம்பாலிலும் வரும்.”