பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

திணைப் பொதுப் பெயர்

சூரியன் உதித்தான். சூரியன் உதித்தது - இவற்றில் சூரியன் எழுவாய். அதற்கு உதித்தான் என்ற உயர்திணைப் பயனிலை கொடுக்கப் பட்டிருக்கிறது. அடுத்த வாக்கியத்தில் உதித்தது’ என்ற அஃறிணைப் பயனிலை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே சூரியன் உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக வந்தது.

'கடவுட் பெயர்களில் சில உயர்திணைக்கும் அ.:றிணைக்கும் பொதுவாக வரும்'

தாய் வந்தாள் - இதில் 'தாய்' என்ற முறைப் பெயர் உயர்திணை முடிவு பெற்றது.

தாய் வந்தது - இதில் 'தாய்' என்ற முறைப்பெயர் அஃறிணை முடிவு பெற்றது.

"தாய் என்ற முறைப்பெயர் இரு திணைக்கும் பொதுவாக வரும்"

நொண்டி வந்தான். நொண்டி வந்தது. இவற்றில் நொண்டி என்ற சினைப்பெயர் உயர்திணை, அஃறிணை ஆகிய இருதிணை முடிவு பெற்றது.