பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

நொண்டி என்ற சினைப்பெயர் இரு திணைக்கும் பொதுவாக வரும்

அவர் எல்லாம் - உயர்திணை. அவை எல்லாம் அஃறினை.

அவன் தான் - உயர்திணை. அதுதான் - அஃறிணை.

அவர் தாம் - உயர்திணை . அவை தாம் - அஃறிணை.

இவற்றில் எல்லாம், தான், தாம் என்ற பொதுப் பெயர்கள் இரு திணை ஏற்றன.

“கடவுட் பெயர்களில் சிலவும், முறைப் பெயர்களில் சிலவும், சினைப் பெயர்களும், எல்லாம், தான், தாம் என்ற பெயர்களும் இருதிணைக்கும் பொதுவாக வரும்.”

பயிற்சி

1. இரு திணைக்கும் பொதுவாக வரும் பெயர்கள் யாவை?

2. சந்திரன் உதித்தான். சந்திரன் உதித்தது

சாத்தன் வந்தது. சாத்தன் வந்தான்.

குருடு வந்தான். குருடு வந்தது.

இவற்றிலுள்ள பொதுப் பெயர்களைக் கீழ்க் கோடிட்டுக் காட்டு.