பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


4 முன்னிலையில் ஒருமை பன்மை காட்டும் விகுதிகள் யாவை? 5 படர்க்கையில் ஐம்பால்களைக் காட்டும் விகுதிகள் யாவை? 8. வினைச் சொல்லாவது யாது?' திருமலை இருந்தான் - இதில் திருமலை என்பது பெயர்ச் சொல், இது உயர்திணை, ஆண்பால், ஒருமை, படர்க்கை, முதல் வேற்றுமை ஆகியவற்றை உணர்த்திற்று. இது எழுவாயாக வந்தது. இருந்தான் - இது 'திருமலை' யின் தொழிலைக் காட்டியது. ஆகவே இது வினைச் சொல். இதுவும் உயர்திணை, ஆண்பால், ஒருமை, படர்க்கை, இறந்த காலம் முதலிய வற்றை உணர்த்திற்று. “ஒரு பொருளின் தொழிலைக் காட்டும் சொல்லே வினைச் சொல்லாம். இது பெயர்ச் சொல்லைப் போலத் திணை, பால், எண் இடங்களைக்காட்டுவதோடு காலத் தையும் காட்டும். பயிற்சி 1 வினைச் சொல்லாவது யாது? 2 வேலன் பாடினன், காலன் ஆடினன், பார்த்தான், மண், மரம், கற்ருன், ஒடினன், நெடுங் காலன் நடந்து சென்ருன்- இவற்றிலுள்ள வினைச்சொற்களை எடுத்து எழுது.