பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

3தக்க வினைச்சொல் எழுதிப் பூர்த்தி செய்:———
   கந்தன் ———————.வேலனும் —————————.அவர்கள் இருவரும் ————————. அதைக் கண்ணன் ———————. அவனும் அவர்களுடன் —————————.
4 கீழ்வரும் வினைச் சொற்களுக்குத் தகுந்த பெயர்ச்சொல் எழுது:———
    ————————சென்றான்.————————சென்றேன்.————————— சென்றாய்.—————————பாடினான்.—————— படித்தாள். —————————ஓடிற்று.———————————பார்த்தன.

9. காலம்

இறந்த காலம்:

நான் படித்தேன். வேலன் உண்டான். கந்தன் கற்றான் —— இவற்றுள் படித்தேன், உண்டான், கற்றான் என்ற வினைச் சொற்கள் தொழில் முன்னமே முடிந்த காலத்தைத் தெரிவித்தன. இவ்வாறு தெரிவிப்பது இறந்த காலம்.

“தொழில் நிகழ்ந்ததைக் காட்டுவது இறந்த காலமாம்."

நிகழ்காலம்:

நான் ஓடுகிறேன். அவன் உண்கின்றான். நீ உண்ணா நின்றாய் - இவற்றுள் ‘ஓடுகிறேன்', 'உண்கின்றான்', 'உண்ணாநின்றாய்' என்ற மூன்றும் தொழில் தற்பொழுது நடப்பதைத் தெரிவிக்கின்றன. இவ்வாறு