பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


தெரிவிப்பது நிகழ்காலம்.

"தொழில் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் காட்டுவது நிகழ்காலமாம்.

வருங்காலம்:

நான் உண்பேன். நீ செய்வாய் - இவற்றுள் உண்பேன், செய்வாய் என்ற வினைச்சொற்கள் தொழில் இனிமேல் நடக்கும் காலத்தைத் தெரிவிக்கின்றன. இவ்வாறு தெரிவிப்பது வருங்காலம்.

'தொழில் நிகழ விருப்பதைக் காட்டுவது வருங்காலமாம்.

காலம் இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் என மூன்று வகைப்படும்.’’

 

பயிற்சி

1காலம் என்றால் என்ன? எத்தனை வகைப்
படும்? எவை?
2இறந்த காலம் என்றால் என்ன?
3நிகழ்காலம் என்றால் என்ன?
4வருங்காலம் என்றால் என்ன?
5நான் காலையில் எழுந்தேன். கடவுளை வணங்கினேன். கற்றதை மறுமுறையும் கற்றேன். அன்று செய்ய வேண்டிய கடமையை எண்ணிப் பார்த்தேன், பழம் பாடங்களைப் படித்தேன்.பள்ளி சென்றேன் - இறந்த காலத்தை நிகழ்காலமாகவும், வருங்காலமாகவும் மாற்றி எழுது.