பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


வில்லை. கருத்து முற்றுப் பெற அது சங்கரன்’ என்ற பெயர்ச் சொல்லை வேண்டி நிற்கின்றது. இவ்வாறு வருவது பெயரெச்சம் என்று பெயர் பெறும்.

     சென்று வந்தான் - இதில் 'சென்று' என்ற வினைச் சொல் முற்றிய கருத்தைக் காட்டவில்லை. கருத்து முற்றுப் பெற அது வந்தான்’ என்ற வினைச் சொல்லை வேண்டி நிற்கின்றது .இவ்வாறு வருவது வினையெச்சம் என்று பெயர் பெறும்.

"வினைச் சொற்களுள் பொருள் முடியாமலும் இருக்கும். பொருள் முடிவதற்கு அது ஒரு பெயர்ச் சொல்லேயோ அல்லது வினைச் சொல்லையோ வேண்டி நிற்கும். அவ்வாறு பொருள் முடியாது, வேறு ஒரு சொல்லைப் பொருள் முடிவதற்கு வேண்டி நிற்கும் சொல்லே எச்சம் என்று பெயர் பெறும்".

                    பயிற்சி 

1 வினை முற்று என்றால் என்ன? உதாரணம் கொடு. 2 எச்சம் என்றால் என்ன? உதாரணம் கொடு. 3 நான் காலையில் எழுந்தேன். பாடம் படித்தேன்.

 கடவுளை வணங்கினேன். கடமை செய்தேன்.
 பெரியோர்களைப் பணிந்தேன்.இறுதியில்  
 வெற்றி பெற்றேன் - இவற்றிலுள்ள வினைமுற்றுச் 
 சொற்களை எடுத்தெழுது.
  • =