பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


4 நான் எழுந்தேன். பின் நான் பள்ளி செல்லுகின்றேன். மாலையில் நான் வீடு திரும்புவேன். அவன் ஓடினான். அவன் ஓடுகிறான். அவன் ஓடுவான் - இவற்றிலுள்ள வினைமுற்றுச் சொற்களை எடுத்து முக்காலத் தலைப்பில் பிரித்து எழுது.

5 வேலன் நல்ல பிள்ளை. அவன் மிக விரைந்து சென்றான். அவன் நற்குணம் படைத்தவன். ஓடிய வேலன் படித்த பாலனைக் கண்டான். பாலன் படித்துத் திரும்பினன். கந்தன் கடையில் தேங்காய் வாங்கி மீண்டான் - இவற்றிலுள்ள வினைச் சொற்களை எடுத்து முற்று, எச்சம் என்ற இரு பிரிவுகளில் எழுது.

                  _____________