பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI. அணி 1. எடுத்துக் காட்டுவமை அகர முதல வெழுத் தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. இ ப் பா ட் டி ல் 'அகர முதல வெழுத்தெல்லாம்' என்பது உவமானம். 'ஆதிபகவன் முதற்றே உலகு என்பது உவமேயம். உவம உருபு இல்லை. "உவமானத்தையும் உவமேயத்தையும் தனித் தனி கொடாமல் கூறுவதே எடுத்துக்காட்டுவமையணியாம்" 2. இல் பொருளுவமை சிங்கத்தை யானைகள் வளைத்தாற் போல முருகனை அசுரர்கள் சூழ்ந்தார்கள் - இதில் சிங்கத்தை யானை கள் வளைத்தன என்பது உலகத்தில் இல்லாதது. இவ்வாறு இல்லாத பொருளை உவமையாகக் கொள்ளு தலே இல்பொருள் உவமை, “உலகத்தில் இல்லாத பொருளை உவமை கூறின் இல்பொருளுவமை அணி எனப்படும்.” 3. ஏகதேச உருவகம் இவன் பகைவர்க்குச் சிங்கம்- இதில் இவனைச் சிங்கமென்று உருவகிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப பகைவரை யானையாக உருவகிக்கவில்லை.