பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98


'ஒரு பகுதியை உருவகப்படுத்தி, மற்ருெரு பகுதியை உருவகப்படுத்தாது விடுதலே ஏகதேச உருவகமாகும்.' 4. தற்குறிப் பேற்றம் சீதையின் முகத்தினது அழகுக்குத் தோற்றுச் சந்திரன் மறைந்தான்- இதில் சந்திரன் தோன்ற வேண்டிய காலத்துத் தோன்றி, மறைய வேண்டிய காலத்தில் மறைந்தான். அவன் ம ைற ந் த து இயற்கை. அவன் தன்னைக் காட்டிலும் சீதையினது முகம் அழகு என்று கொண்டு மறைந்தான் என்பது கவி இயற்கைப் பொருளிடத்தே தனது கருத்தை ஏற்றிக் கூறுகின்ருர். இது தற்குறிப்பேற்றம். "இயற்கையாகவுள்ள ஒரு பொருளினிடத்துக் கவி தனது கருத்தை ஏற்றிச் சொல்வதே தற்குறிப்பேற்ற அணியாம்' 5. பிறிது மொழிதல் எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்'- இவ்வுவ மானம் வீரைெருவன் போருக்கு எழுந்தவுடன் வீரர் அல்லாதார் பலம் அழிவர் என்ற உவமேயம் தோன்றச் செய்கிறது. இது பிறிது மொழிதலாம். உவமானம் கூறிய மாத்திரத்தில் உவமேயம் பெற வைத்தலே பிறிது மொழிதல் அணியாம்'