பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111


வேலன் படிப்பில் கண்ணுங் கருத்துமாயிருக் கின்ருன் - இதில் வந்துள்ளது கண்ணுங் கருத்தும். அவன் அல்லும் பகலும் உழைத்தான் - இதில் வந்துள்ளது அல்லும் பகலும், அடிமுதல் முடிவரை நோவு எடுக்கிறது - இதில் வந்துள்ளது அடி முதல் முடிவரை. இராமனைப் பிரிந்த சீதை அழுத கண்ணும் சிந்திய முக்குமாய்த் துன்புற்ருள் - இதில் வந்தது அழுத கண்ணும் சிந்திய முக்கும். மற்றையவற்றையும் இவ்வாறே காண்க. மரபுத் தொடர்கள் அகத்தினழகு முகத்தில் தெரியும் இருதலை மணியன் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளன் அடியற்ற மரம் போல் படிமேல் விழுந்து தீபாவளி குளித்தான் உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுதல் கொடியாரைநீத்து அடியாரைஏத்து 4. வாக்கியங்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற் கொப்ப சீதையைப் பிரிந்த இராமனது முகம் அவனது உள்ளக்கிடக்கையை வெளிக் காட்டிற்று- இதில் வந்துள்ளது, அகத்தினழகு முகத்தில் தெரியும் என்பதாம்.