பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4


தழீஇ, ஒரீஇ- இவற்றுள் தழுவி, ஒருவி என்ற சொற்கள் பிறிதொரு சொல்லாக உருமாறி அள பெடுத்தன. "ஒரு சொல் பிறிதொரு சொல்லாதற் பொருட்டு அளபெடுப்பதும், ஒரு சொல் உருமாறி அளபெடுப் பதும் சொல்லிசையளபெடையாம்' 'ஒள' ஒழிந்த நெட்டெழுத்துக்கள் ஆறும் மொழி முதல், இடை, கடையிலும், 'ஒள' மொழியின் முதலிலும் அளபெடுக்கப் பத்தொன்பதும், இன்னிசையளபெடை, சொல்லிசையளபெடை என்ற இரண்டுமாக உயிர் அளபெடை இருபத்தொன்ரும். 2. ஒற்றள பெடை இலங்ங்கு வெண்பிறை - இதில் ங்கர ஒற்றில் அரைமாத்திரை ஓசை குறைந்திருக்கிறது. அன் வோசையை எடுக்க வேண்டும். அதற்கு அளவு குறைந்த அம்மெய்யெழுத்தை மற்று ஒரு முறை எழுத வேண்டும். உச்சரிக்கும் பொழுது அதை ஊன்றி உச்சரிக்க வேண்டும். இலங்ங்கு -இதில் இரு குறிலின் பின் சொல்லின் இடையில் ஒற்று அளபெடுத்தது. எங்ங்கிறைவன்-இதில் ஒருகுறிலின்பின் சொல் லின் இடையில் ஒற்று அளபெடுத்தது. மடங்ங் கலந்த - இதில் இணைக்குறிலின் பின் சொல்லின் கடையில் ஒற்று அளபெடுத்தது.