பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138


மைேன்மணியம் என்ற சிறந்த நூலைச் சுந்தரம் பிள்ளை இயற்றினர். சேரநாட்டு அரசனுகிய புருடோத்தமனின் படையை எதிர்ப்பதன் பொருட்டு பாண்டிநாட்டுப் போர் வீரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். பாண்டியனுகிய சீவகன் தன் படைகளை நோக்கி ஊக்க உரைகள் கூறுகின்ருன். இதையே இவ்வடிகள் கூறுகின்றன. போரில் படை வீரர்கள் இரத்தம் இழப்பது இயல்பு. எப்போரும் இரத்தம் சிந்தாமல் முடிவு பெறுவது இல்லை. சுதந்திரத்தை விரும்பாத உயிரே இல்லை. உயிரே சுதந்திரமாகும். அதைப் பெறும் பொருட்டே இரத்தம் சிந்த நேரிடுகிறது. இவைகள் யாவும் இயல்பாக நடைபெறுவன. இவற்றின் மேல் கவி தன் கருத்தை ஏற்றிக் கூறுகின்ருர். இவ்விரத்தம், "பாண்டிவீரர்கள் சுதந்திரத்தைத் தம்முயிர் கொடுத்தும் காப்பர்' என்று யாவர்க்கும் அறிவிக்கும்- எனக் கூறு வதின் நயம் போற்றத் தகுந்ததாகும். ஆகவே இவ்வடிகள் தற்குறிப்பேற்றவணி பெற்று வந்திருக் கின்றன. தி இதன் முதலடியில் முதல் சீரும் மூன்ருஞ்சீரும் ஓரெழுத்து மோனை பெற்று வந்தன. இதன் முதலடியின் முதல் சீரும் இரண்டாமடியின் முதல் சீரும் ஓரெழுத்து மோனை பெற்றன. அவை இரண்டும் ஓரெழுத்து எதுகையும் பெற்று வந்தன. இதில் வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண் தளையும் விரவி வந்தன.