பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10


க் + அகரம் = ககரம் - இதில் க் என்ற மெய் யெழுத்து அகரம் பெற்று வந்தது. ஆ+காரம்= ஆகாரம்-இதில் உயிர் நெட் டெழுத்து 'காரம்' என்னும் சாரியை பெற்று வந்தது. 8十 காரம் = ஐகாரம்; ஒள-காரம் = ஒளகாரம் ஐ - கான் = ஐகான்; ஒள+கான் = ஒளகான் இவற்றில் ஐ, ஒள என்ற இரண்டு நெட் டெழுத்துக்களுக்கும் காரம் கான்' என்பவை சாரியைகளாக வந்தன. அ + கரம் = அகரம் ம - கரம் = மகரம் o அ 十 காரம் = அகாரம் ம - காரம் = மகாரம் அ + கான் = அஃகான் ம - கான் - மஃகான் இவற்றில் உயிர்க்குற்றெழுத்தும், உயிர்மெய்க் குற்றெழுத்தும் கரம், காரம், கான் என்னும் சாரியைகள் பெற்று வந்தன. "தனி மெய்கள் அ என்னும் சாரியையும் , உயிர் நெடில்கள் காரம் என்னும் சாரியையும், ஐ, ஒள என்ற இரு நெட்டெழுத்துக்களும் காரம் என்னும் சாரியையுடனே கான் என்னும் சாரியையும், உயிர்க் குறிலும் உயிர்மெய்க் குறிலும் காரம், கான் என்ற இரண்டு சாரியைகளுடனே கரம் என்னும் சாரியையும் பெற்று வருவதே எழுத்துச் சாரியையாம்."