பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


நான் செல்வேன் - இதில் செல்வேன்' என்பது வினைச்சொல். இது செயல் நடக்கப் போவதைக் காட்டுகிறது. ஆகவே இது வருக காலம். "இறந்த காலம், நிகழ் காலம், வருங் காலம் எனக் காலம் மூன்று வகைப்படும்.' குத்திரம்: “இறப்பு எதிர்வு நிகழ் வெனக் காலம் மூன்றே: இறந்த கால இடை நிலை நடந்தான் - இதில் நட பகுதி ஆன் விகுதி 'த் இடைநிலை. இவ்விடைநிலை இறந்த காலம் காட்டிற்று. நடந்தான், நடந்தாள், நடந்தார், நடந்தது, நடந்தன. - இவற்றில் ஐம்பாலிலும் 'த் என்ற இடை நிலை இறந்த காலங் காட்டிற்று. நடந்தேம், நடந்தாய், நடந்தீர்-இவற்றில் மூன்று இடங்களிலும் 'த் என்ற இடைநிலை இறந்த காலங் காட்டிற்று. உண்டாய் - இதில் 'ட்' என்றது இடை நிலையா கும். இதுவும் ஐம்பால் மூவிடங்களிலும் இறந்த காலம் காட்டும். சென்ருன் - இதில் ற் என்றது இடைநிலை யாகும். இதுவும் ஐம்பால் மூவிடங்களிலும் இறந்த காலம் காட்டும். அனுப்பினரீர்- இதில் 'இன்' என்றது இடை நிலையாகும். இதுவும் ஐம்பால் மூவிடங்களிலும் இறந்த காலம் காட்டும்.