பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


பொற்ருெடி வந்தாள் -இதில் பொற்ருெடி என் பது வந்தாள் என வரும் சொல்லால், பெண்ணைக் குறிப்பால் உணர்த்திற்று. இவ்வாறு வருவது அன் மொழித் தொகையாம். இப்போது பொன்னன் - இதில் பொன்னன் என்பது இப்போது என முன் நிற்குஞ் சொல்லால், பொன்னையுடையவனுய் இருக்கிருன் என்பதைக் குறிப் பால் உணர்த்திற்று. இவ்வாறு வ ரு வ து வினைக் குறிப்பாம். ஆத்திசூடி படித்தான் - இதில் ஆத்தி சூடி என்ற முதற் குறிப்புச் சொல், படித்தான். என வருஞ் சொல் லால் அச் சொற்ருெடரை மு த லி லு ள் ள நூலை உணர்த்திற்று. ஐவரொடு குந்தி வந்தாள் - இதில் ஐவர் என்ற தொகைக் குறிப்புச் சொல் குந்தி, எனவரும் சொல்லால் பாண்டவரைக் குறிப்பால் காட்டிற்று. கல்லைக் கடிக்க நன்கு சமைத்தாய் - இ. தி ல் சமைத்தாய் என்ற பிற குறிப்புச் சொல், கல்லக் கடிக்க என நிற்குஞ் சொல்லால் நன்ருய்ச் சமைக்கவில்லை என்பதைக் குறிப்பால் காட்டிற்று. "இரு திணையிலும் ஆண்பால், பெண்பால் களுள் ஒன்றை ஒழிக்கும் பொதுச் சொற்களும். வலித்தல், மெலித்தல் முதலிய ஒன்பது வகைச் செய்யுள் விகாரச் சொற்களும், இடக்கரடக்கல் முதலிய மூவகைத் தகுதி வழக்குச் சொற்களும், ஆகு பெயர்ச் சொற்களும், அன் மொழித் தொகைச் சொற்களும், குறிப்பு வினைச் சொற் களும், முதலில் நிற்கிற மொழியைக் குறிக்கிற சொற் களும், பொருளின் தொகையைக் குறிக்கும் சொற்களும், முதற் குறிப்புத் தொகைக் குறிப்புமல்லாத பலவழி