பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


யாலும் குறிப்பாய் வரும் பிற குறிப்புச் சொற்களும், இவை போல்வன பிறவும், குறிப்பினுல் பொருளைத் தருகிற சொற்களாம். இவையல்லாதவை யெல்லாம் வெளிபடையாய்ப் பொருட்களைத் த ரு கிற சொற் களாம்.' சூத்திரம்: 'ஒன்றுஒழி பொதுச்சொல் விகாரம் தகுதி ஆகுபெயர் அன்மொழி வினேக் குறிப்பே முதல்தொகை குறிப்போடு இன்ன பிறவும் குறிப்பில் தருமொழி அல்லன வெளிப்படை" . 2. மரபு குதிரைக் குட்டியைக் குதிரைக் கன்று என்று கூறுதல் கூடாது. நமது பெரியோர்கள் குதிரைக் குட்டி என்றே அதை அழைத்தனர். அவ்வாறு நாமும் அதை அழைக்க வேண்டும். அஃதில்லாது குதிரைக்கன்று என்று அதைக் கூறினுல் அது மரபு வழுவாகும். இது போலவே யானை லத்தி என்பதை யானைச் சாணம் என்றும், பசுவின் சாணம் என்பதைப் பசுவின் லத்தி என்றும், வாழைக் கன்று என்பதை வாழைக்குட்டி என்றும், வாழைகுஞ்சு என்றும், ஆட்டிடையனை ஆட்டுப் பாகன் என்றுங் கூறுதல் மரபு வழு. இவை போல மற்றையவற்றையும் கொள்க. 'எந்தப் பொருளை எந்தச் சொல்லால் எவ்வழி யால் அறிவுடையோர் சொன்னர்களோ அப்பொருளை அச்சொல்லால் அவ்வழியால் சொல்லுதலே மரபாம்.' சூத்திரம்: "எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே.: