பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51


3. வழுவமைதிகள்- திணை, பால், இடம், காலம், மரபு. வழா நிலை அவன் வந்தான், அவள் வந்தாள், அவர்கள் வந்தார்கள், அது வந்தது, அவை வந்தன - இவற் றில் அவன், அவள், அவர்கள், அது. அவை என்ற சொற்கள் வந்தான், வந்தாள், வந்தார்கள், வந்தது. வந்தன என்ற திணை, பால். எண், இடம் முதலிய வற்றுள் தமக்கொத்த நிலையில் முறையே பொருந்தின. நேற்று வந்தான்- இதில் காலம் ஒத்து வந்தது. இவ்வாறு "சொற்கள் தொடருமிடத்து, முடிக்கப் படுஞ்சொற்களோடு முடிக்குஞ் சொற்கள் தொடரு மிடத்து, முடிக்கப்படுஞ் சொற்களோடு முடிக்குஞ் சொற்கள் திணை, பால், இடம், காலம், வினு, விடை, மரபு என்ற வகைகளில் மாறுபடாமல் தொடர்ந்து இலக்கணக் குற்றமில்லாது நிற்பது வழாநிலையாம். வழு - அவன் வந்தது - இதில் அவன் என்பது உயர் திணை வந்தது என்பது அஃறிணை. ஆகவே உயர்திணை, அஃறிணை முடிவை ஏற்பது வழுவாகும். இது திணை வழுவாகும். இதுபோலவே அவன் வந்தாள் - இது பால்வழு யான் வந்தான் - இது இடவழு நாளை வந்தான் - இது காலவழு கறக்கிற எருமை பாலோ சினையோ? இது விளுவழு.