பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


வேற்றுமை உருபு மறைந்து நிற்க, நிலை மொழியும் வருமொழியும் புணர்வதே வேற்றுமைத் தொகை யாகும். வேற்றுமை உ ரு பு வெளிப்பட்டு நிற்க, நிலைமொழியும் வரு மொழியும் புணர்வதே வேற்றுமை விரி எனப்படும். இது வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் என்றும் வழங்கப்படும்' உருபும் பயனும் உடன் தொக்க தொகை நீர்க்குடம் (நீரையுடைய குடம்) - இது இரண்டாம் வேற்றுமை. .ெ பா ற் கு ட ம் (பொன்னலாகிய குடம்) - இது மூன்ரும் வேற்றுமை. நோய் மருத்து (நோய்க்குத் தரும் மருந்து) - இது நான்காம் வேற்றுமை. - மலையருவி (மலையினின்று விழும் அருவி) - இது ஐந்தாம் வேற்றுமை. காட்டுப் புலி (காட்டிலுள்ள புலி) - இது ஏழாம் வேற்றுமை. * மேற் கூறியவற்றில் வேற்றுமை உருபே அன்றிப் பொருளும் மறைந்து நிற்கின்றன. இவையே உரு பும் பொருளும் உடன் தொக்க தொகையாம். இது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எ ன் றும் கூறப்படும். 'வேற்றுமை உருபு அன்றி பொருளும் மறைந்து வரும். அவையே உருபும் பொருளும் உடன் தொக்க தொகை என்றும், உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்றும் வழங்கப்பெறும்",