பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


அல்வழிப் புணர்ச்சி கொல் யானை, க ரு ங் கு தி ைர - என்பவைகள் கொல் + யானை, கருமை + குதிரை என்ற சொற்கள் சேர்ந்து உண்டாயின. ஆகவே வேற்றுமை யல்லா நிலையில் இரு சொற்கள் புணருகின்றன. இவ்வாறு இரு சொற்கள் வேற்றுமையல்லாத நி லை யி ல் புணருவது அல்வழிப் புணர்ச்சி. வேற்றுமை அல்லாத வழியில் நிலைமொழியோடு வருமொழி புணர்வது அல்வழிப் புணர்ச்சி எனப்படும்." கருங் குதிரை - இதில் கருமை + குதிரை என்ற இரு சொற்கள் சேர்ந்தன. ஆகிய என்ற சொல் மறைந்து நிற்கிறது. இவ்வாறு வருவது தொகை யாகும். இது தொகைநிலைத் தொடர் என வழங்கும். பொன்னன் வந்தான் - இதில் பொன்னன் + வந் தான் என்ற இரு சொற்கள் சேர்ந்தன. உருபு முதலி யன இதில்மறைந்து நிற்கவில்லை. இவ்வாறு வருவது தொகா நிலையாகும். இது தொகா நிலைத் தொடர் என வழங்கும். 'அல்வழியுள் நிலைமொழி வருமொழி இரண்டும் சேர, அவற்றின் பொருளை விளக்குவது மறைந்து நிற்கும். அதுவே தொகை நிலைத் தொடர் எனப்படும். அவ்வாறு மறைதலின்றி வருவது தொகாநிலைத் தொடர் எனப்படும். தொகைநிலைத் தொடர் கொல் யானை - இது கொன்ற யானை, கொல்கிற யானை, கொல்லும் யானை என விரியும். இவ்வாறு