பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


பெயரெச்சத்தின் பகுதிமாத்திரம் நிலைமொழியாய் வர வருமொழியோடு புணர்வது வினைத்தொகையாகும். குத்திரம்: 'காலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை" பண்புத் தொகை செங்கதிர்- இது செம்மையாகிய கதிர் என விரியும். இதில் மை விகுதி மறைந்து நிற்கிறது. கருங்குதிரை - இது வண்ணப் பண்புத்தொகை வட்டக்கல் - இது வடிவுப் பண்புத்தொகை ஒரு பொருள்- இது அளவுப் பண்புத் தொகை இன்சொல் - இது சுவைப் பண்புத்தொகை பனைமரம் - இரு இரு பெயரொட்டுப் == பண்புத்தொகை "மை என்னும் பண்புப் பெயர் விகுதியும், ஆகிய என்ற பண்பு உருபும் தொக்கு வருவது பண்புத் தொகையாம். இது வண்ணம், வடிவு அளவு, சுவை என்ற நான்கு பொருளிலும் வரும். ஒரு பொருளுக்கு இருபெயர் வந்து இருபெயர் ஒட்டுப் பண்புத்தொகை என்றும் பெயர் பெறும்.' சூத்திரம்: 'பண்பை விளக்கும் மொழிதொக் கனவும் ஒரு பொருட்கு இரு பெயர் வந்தவுங் குணத்தொகை' உவமத் தொகை மதி முகம்- இது மதி போன்ற முகம் என விரியும். இதில் மதி- உவமானம், முகம். உவமேயம் போன்ற உவம உருபு. உவம உருபு தொக்கு நிற் கிறது. இது உவமத்தொகை,