பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


உவமை உருபு தொக்கு நிற்க உவமானச் சொல்லும், உவமேயச் சொல்லும் தொடர்ந்து வருவது உவமத் தொகையாம். சூத்திரம்: "உவம உருபு இலதுஉவமத் தொகையே'. உவம உருபுகள் குத்திரம்: 'போலப் புரைய ஒப்ப உறழ மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத்து உருபே' உம்மைத் தொகை கபிலபரணர் - கபிலரும் பரணரும் என இது விரியும். இவ்வாறு விரிவது எண்ணல் ஆம். சாணரை - இது ஒரு சானும் அ ைர யு ம் என விரியும். இவ்வாறு விரிவது நீட்டல் ஆம். கழஞ்சேகால் - இது ஒரு கழஞ்சும் காலும் என விரியும். இவ்வாறு விரிவது எடுத்தல் ஆம். நாழியாழாக்கு - இது ஒரு நாழியும் ஆழாக்கும் என விரியும். இவ்வாறு விரிவது முகத்தல் ஆம். இவற்றில் 'உம்' என்னும் இடைச் சொல் தொக்கு நிற்கிறது. ஆகவே இது உம்மைத் தொகை.