பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


4. நெடிலடி + வென்ருன் வினையின் தொகையாய் விரிந்து தன்க ணுென்ருய்ப் பரந்த வுணர்வின் ஞெழியாது முற்றும் சென்ருன் றிகழுங் சுடர்சூ ழொளிமூர்த்தி யாகி நின்ரு னடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்ருர், இப்பாவில் ஒவ்வோரடியும் ஐந்து சீர் க ள் கொண்டிருப்பதால் ஒவ்வொன்றும் நெடிலடி, 5. கழிநெடிலடி வரும் இடம் கண்டு கொள்க. தொடை (எதுகை, மோனை, முரண்) பல அடிகளிலாயினும், பல சீர்களிலாயினும் எழுத்துக்கள் ஒன்றிவரத் தொடுப்பதே தொடை எனப் படும். அது எதுகை, மோனை, முரண், அளபெடை, இயைபு என ஐந்து வகைப்படும். அந்தாதித் தொடை என்றும் ஒன்று உண்டு. எதுகைத்தொடை ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே செல்லும்வா யெல்லாம் செயல். இப்பாவில் ஒல்லும், செல்லும் என்ற சீர்களில் முதல் எழுத்து அளவொத்து நிற்க, லகர ஒற்று இரண்டிலும் ஒன்றி வந்தது. இவ்வாறு வருவதே எதுகைத்தொடை. இதில் இரு அடிகளில் வந்ததால் அடியெதுகையாம்.