பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


செல்லும், யெல்லாம் என்ற சீர்களிலும் இரண் டாம் எழுத்து ஒன்றி வந்ததால் இதுவும் எதுகைத் தொடைதான். இவைகள் சீர்களில் வந்ததால் சீர் எதுகையாம். "அடிதோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பதே எதுகை யாம். இது அடியெதுகை, சீர் எதுகை என இரு வகைப்படும்' சீர் எதுகைகளின் விரிவு பொன்னி னன்ன பொறிசுணங் கேந்தி - இவ் வாறு அளவடியில் முதல் இரு சீர்களில் எ து ைக அமைவதே இணையெதுகை. பன்னருங் கோங்கி னன்னலங் கவற்றி-இவ்வாறு அளவடியில் முதற் சீர், மூன்ரும் சீர்களில் எதுகை அமைவதே பொழிப்பு எதுகை. மின்னிவ ரொளிவடந் தாங்கி மன்னிய - இவ் வாறு அளவடியில் முதற் சீர் நான்காம் சீ ர் க ளி ல் எதுகை அமைவதே ஒரு.உ.வெ.துகை. நன்னிற மென்மலை மின்னிடை வருத்தி - இவ்வாறு அளவடி இரண்டாஞ்சீர், மூன்ருஞ்சீர்களில் எதுகை அமைவதே கூழையெதுகை. என்னையு மிடுக்கண் டுன்னுவித் தின்னிடை - இவ்வாறு அளவடியில் இரண்டாம் சீர் தவிர மற்றைய சீர்களில் எதுகை அமைவதே மேற்கதுவாயெதுகை.