பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


அன்ன மென்பெடை போலப் பன்மலர்க் - இவ் வாறு அளவடியில் மூன்ருஞ்சீர் தவிர மற்றையச் சீர் களில் எதுகை அமைவதே கீழ்க்க துவாயெதுகை. கன்னியம் புன்னை யின்னிழல் துன்னிய - இவ் வாறு அளவடியில் எல்லாச் சீர்களிலும் எதுகை அமை வதே முற்றெ துகை. "சீர் எதுகைத் தொடை இணை, பொழிப்பு, ஒருஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்று பல வகைப்படும்." வருக்கவெ.துகை பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார். இப்பாவில் முதலடி முதற்சீர். இரண்டாமடி முதற் சீர் இவற்றில் ற, றை என்பன எதுகையாக அமைந் தன. இவ்வாறு அமைவது வருக்க எதுகை. நெடிலெதுகை ஆவா வென்றே அஞ்சினர் ஆழ்ந்தார் ஒருசாரார் கூகூ வென்றே கூவிளி கொண்டார் ஒருசாரார் இதில் முதல் இரண்டாம் அடிகளிலுள்ள முதல் சீர்களின் இரண்டாம் எழுத்து நெடிலாகும். இவ்வாறு வருவதே நெடிலெதுகை. இனவெ.துகை தக்கார் தகவிலார் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும். இதில் இரு அடிகளின் முதற்சீர்களின் இரண் டாம் எழுத்து, ககர சகர ஒற்றுக்கள். இவ்வாறு வருவது