பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


இனவெதுகை. இது வல்லின எதுகை, மெல்லின எதுகை, இடையின எதுகை என மூவகைப்படும். 'மேலும் வருக்க எதுகை, நெடிலெதுகை, இன வெதுகை என்ற பல பிரிவுகளும் உண்டு' மோனைத் தொடை "கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.” இப்பாவில் கற்க, கசடற, கற்பவை, க ற் ற பி ன் என்ற சீர்களில் முதலெழுத்து ஒன்றி வந்தன. இவ் வாறு வருவது சீர்மோனை எனப்படும். "வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று'. இப்பாவில் வருவிருந்து, பருவந்து என்ற சீர் களில் முதலெழுத்து ஒன்றி வந்தன. இவ்வாறு வரு வது அடிமோனே எனப்படும். செய்யுளில் பல அடிகளிலாவது, அடிகளின் சீர் களிலாவது முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனையாம், அது அடிமோனை சீர்மோனை என இருவகைப்படும்." மேற் கூறியவாறு ஒன்றுபடுங்கால் பலவிடங் களில் ஒரே எழுத்து ஒன்று படுதலும் அதற்கு இன வெழுத்து ஒன்றுபடுதலுமுண்டு. மோனை இனவெழுத்துக்கள் (1) அ, ஆ, ஐ, ஒள (4) ஞ த (2) இ, ஈ, எ, ஏ, யா (5) ம, வ (3) உ, ஊ, ஒ, ஓ (6) த, ச முதலியனவாம்.