பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90


சீர்மோனையின் விரிவு அணிமல ரசோகின் றளிர்நலங் கவற்றி- இவ் வளவடியில் முதல் இரு சீ ர் க ளி ல் மோனை அமைந் துள்ளது. இவ்வாறு அமைவதே இணை மோனை. அரிக்குரற் கிங்கிணி யரற்றுஞ் சீறடி- இவ் வளவடியில் முதல், மூன்ரும் சீர்களில் மோனை அமைந் துள்ளது. இவ்வாறு அமைவது பொழிப்புமோனை. அம்பொற் கொடிஞ்சி நெடுந்தே ரகற்றி- இவ் வளவடியில் முதல், நான்காம் சீர்களில் மோனை அமைந்துள்ளது. இவ்வாறு அமைவது ஒருஉமோனே. அஞ்சிறை அணிவண்டு அரற்று நாடன்- இவ் வளவடியில் முதல் மூன்று சீர்களில் மோனை அமைந் துள்ளது. இவ்வாறு அமைவது கூழைமோனை. வானின் றுலகம் வழங்கி வருதலால்- இவ் வளவடியில் இரண்டாம் சீர் ஒழிய ஏனைய சீர்களில் மோனை அமைந்துள்ளது. இவ்வாறு அமைவது மேற்கதுவாய்மோனை. அவிர்மதி அனைய திருநுதல் அரிவை - இவ் வளவடிச் செய்யுளில் மூன்ருஞ் சீர் ஒழிய மற்றையச் சீர்களில் மோனை அமைந்துள்ளது- இவ்வாறு அமைவது கீழ்க்கதுவாய் மோனை, துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய துTஉம் மழை இப்பாவில் முதலடியில் நான்கு சீர்களிலும் மோனை அ மை ந் து ஸ் ள து. இவ்வாறு அமை வது முற்றுமோனை,