பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 6. இக்குறிக்கு ஆங்கிலத்தில் எக்ஸ்கிளமேஷன் (Exclamation) என்பது பெயர். இந்தக் குறியுள்ள இடத்தில் நான்கு முறை கண் இமைக்கும் நேரம் நிறுத்த வேண்டும். இக்குறியை அச்சம், ஆச்சரியம் இரக்கம் ஆகிய இவற்றை உணர்த்தும் சந்தர்ப்பங் களில் இட வேண்டும். (உ-ம்) அதோ புலி ! - அச்சம் ஆஹா ! என்ன அழகு - ஆச்சரியம் ஐயோ! பாவம் ! என்ன செய்வான் - இரக்கம். கேள்விகள் 1. , ! இந்தக் குறிகளுக்குரிய ஆங்கிலப் பெயர்கள் எவை ? 2. இக்குறிகளை இட்ட இடங்களில் எவ்வளவு நேரம் நிறுத்த வேண்டும் ? 3. இக்குறிகளை எங்கெங்கு இட வேண்டும் ? இ பயிற்சி-25 பின் வரும் வாக்கியங்களில் தகுந்த தி றுத் த க் குறிகளை அமைக்க - அந்தோ யான் என் செய்வேன் என்னே அதிசயம் நீ எப்பொழுது வந்தாய் யான் என் தம்பி தங்கை தாயார் தகப்பனர் முதலியவர்களுடன் ஊருக்குப் போனேன். 浮