பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 34. நீட்டல் அளவை ஆகுபெயராவது, நீட்டல் அளவைப்பெயர் அவ்வளவினக் கொண்ட பொரு ளுக்கு ஆகி வருவதாம். (உ-ம்) ஒரு முழம் தந்தான் - இங்கு முழம் என் னும் நீட்டல் அளவைப் பெயர் அவ்வள வைக் குறியாமல், அவ்வளவினயுடைய துணியை உணர்த்தினமை அறிக. 35. தானியாகு பெயராவது, இடத்தில் உள்ள பொருளின் பெயர் இடத்துக்கு ஆகி வருவதாம். (உ-ம்) முடி அசைத்தான் - இங்கு முடி’ என் னும் கிரீடமாகிய பொருட்பெயர் அதற்கு இடமாகிய தலைக்கு ஆனமை உணர்க. குறிப்பு: இட ஆகு பெயர் இடத்தில் உள்ள பொருளை உணர்த்தும். தானி ஆகுபெயர், பொருள் உள்ள இடத்தை உணர்த்தும். 36. கருத்தாவாகு பெயராவது, கருத்தாவின் பெயர், அக்கருத்தாவால் செய்யப்பட்ட பொருளுக்கு ஆகி வருவதாம். (உ-ம்) சுந்தரர் படித்தான் - இங்குச் சுந்தரர் என்னும் கருத்தாவின் பெயர், அக் கருத் தாவால் எழுதப்பட்ட தேவாரமாகிய நூலுக்கு ஆனம்ை காண்க.