பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 26 (உ-ம்) முருகன் வந்தான் - வினைப் பயனிலை. அவன் முருகன் - பெயர்ப் பயனிலை. முருகன் யாவன் - விளுப் பயனிலை. குறிப்பு: (1) இவ் வேற்றுமைக்கு ஆனவன், ஆனவள் ஆனவர் ஆனது, ஆனவை என்பன சொல்லுருபுகளாம். (உ-ம்) கந்தனைவன் வந்தான். வள்ளியானவள் வந்தாள். மனிதரானவர் வந்தனர். வேலானது வந்தது. மயில்களானவை வந்தன. 2. இவ்வேற்றுமை, கருத்தா வேற்றுமை எனவும் பெயர் பெறும். அக்கருத்தா ஏவுதல் கருத்தா இயற்றுதல் கருத்தா என இரண்டு வகைப்படும். ஏவுதல் கருத்தா என் பது,பிறரைக்கொண்டு ஒருசெயலைச்செய்விப்பது. இயற்று தல் கருத்தா என்பது தானே ஒரு செயலைச் செய்வது. (உ-ம்) அரசன் நாற்காலி செய்தான்-ஏவுதல் கருத்தா, தச்சன் நாற்காலி செய்தான்-இயற்று தல் கருத்தா. நன்-சூ எழுவாய் உருபு திரியில் பெயரே : வினேபெயர் விளுக்கொளல் அதன்பய னிலேயே. 41. இரண்டாம் வேற்றுமை என்பது, செயப்படு பொருள் வேற்றுமையாம். (உ-ம்) முருகன் கணபதியைக் கண்டான். 42. மூன்ரும் வேற்றுமை என்பது கருவி கருத்தா, உடன் நிகழ்ச்சிப் பொருள்களில் வரும்